Monday, July 13, 2009

ஜெகநாதன் said...

அன்பு ஜாகிர்ராஜா,
பாங்கு ஒலியை காலை அலராமாக ​கொண்டிருந்தாலும், கறி பிரியாணியாக ​நோன்பு நாளை அடையாளங்​கண்டிருந்தாலும், மாமா மாப்ளேன்னு வாயார குசலம் விசாரித்துக் ​கொண்டாலும், துலுக்கத் திமிரு என்று தள்ளியே வாழும் சாமானியனாகவே இருந்தேன் - உங்கள் எழுத்தை வாசிக்கும் முன். நம்மூரு (ஐம் ப்ரம்
தாராபுரம்) ஸைடுல எழுதுறவங்கன்னா சுப்ரபாரதிமணியன், க.சீ. சிவக்குமார், என். ஸ்ரீராம் இப்படி கொஞ்சம் பேர தான் தெரியும். 2000-ல் தருமபுரி ​நூலகத்தில் உங்க சிறுகதை ​​தொகுதி ​செம்பருத்தி பூத்த வீடு கிடைச்சது (அப்ப அங்க பொறியியல் படிச்சுக்கிட்டு இருந்தேன்) படிச்சு முடிச்சதும் கீரனூர் கிளம்பி உங்களப் பாக்கணும்னு ​தோணுச்சு. விசாரிச்சதுல நீங்க தஞ்சாவூர் பக்கமா ஸெட்டில் ஆயிட்டதா சொன்னாங்க. அப்ப இருந்து புத்தகத்துக்கு நடுவுல வெச்சிருக்கிற மயிலிறகு மாதிரி இருக்கு உங்க எழுத்து. இப்ப இந்த மாதிரி பிளாக்கில உங்கள சந்திக்கிறது ​ஒரு சைபர்த்தனமான சந்தோஷமா இருக்கு.
உங்கள் கதைங்கள் ​கொங்கு நிலப்பரப்பை ஒட்டிய இஸ்லாமிய வாழ்வுமுறையை யதார்த்தமாக உணர்த்துகிறது. பாங்கு ஒலி, பர்தா மறைத்த அழகு, உருது பாஷை, பிற சம்பிரதாயங்கள் என பாகுபாடுகள் அனைத்தும் ஒரே தள்ளலில் தள்ளி அந்த எளிய உலகத்தினுள் பிரவேசிக்க முடிகிறது. இவ்வளவு எளிமையாய் முஸ்லீம்
சமுதாயத்தை படித்துணர முடியும் என எப்போதும் நினைக்கவில்லை. சொல்லப்​போனால் உங்கள் எழுத்து ஒரு யாத்ரீகன் எழுதியது போல் நேர்மையாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.
தற்​போது என்னிடம் உங்கள் புத்தகம் எதுவும் இல்லை. சரியான வரிகளை நினைவு கூற முடியவில்லை. இருப்பினும் மசூதி குளத்தின் மீனைத் திருடும் மாமனார், குளத்துக்குள் குசு விட்டால் குமிழிகள் வரும் எனும் கஞ்சா ​தோழன், மதினாவுக்கு யாத்திரை ​சென்ற தம்பதியினர், மதம் மாற்றப்படுபவன், ஒட்டக வரவால் ஆட்டு வியாபாரத்தை இழக்கும் கசாப்புக் கடைக்காரர், லப்பை-ராவுத்தர் ​வேற்றுமை என இந்த உலகம், பக்கத்திலேயே இருந்தாலும் பார்வைக்கு தட்டுபட்டதேயில்லை.
எல்லா மதத்திலும் ​பொதுவான விஷயம் - வறுமையை ஒண்ணும் செய்ய முடியாதுங்கிறதுதான் போலிருக்கிறது. என்ன ​செய்ய வறுமைதானே மதத்தையே தோற்றுவித்திருக்கிறது.

வாழ்த்துக்களுடன்..

க. ஜெகநாதன்
http://jaganathank.blogspot.com/

1 comment:

  1. ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

    ReplyDelete